பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்

ப.வேலுார்: --நாமக்கல், பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவர் ஸ்ரீவர்ஷன், 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

மாணவி இனியா, 587 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவர் சரண், மாணவி ஸ்வேதா ஆகியோர், 586 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்வு எழுதிய அனைவரும், 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடைந்தனர். கணினி அறிவியல் பாடத்தில், 12- பேர், கணிதம், 4, -வேதியியல், 3,- கணினி பயன்பாட்டியல், 3-, கணக்கு பதிவியலில், 1 மாணவரும், வேலைவாய்ப்பு அறிவியலில், 1 மாணவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.சாதனை படைத்த மாணவர்களை, விவேகானந்தா அறக்கட்டளை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நெடுஞ்செழியன், செயலர் சுப்பிரமணியம், பொருளாளர் இன்ஜினியர் வேலுசாமி, தாளாளர் ராமசாமி மற்றும் இயக்குனர்கள் சுப்பிரமணியம், சண்முகம் துரைசாமி, வாசுதேவன், சிவக்குமார், ராமசாமி, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்

Advertisement