குவாரியில் பின்னோக்கி  நகர்ந்த லாரி மோதி டிரைவர் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி சுத்தமல்லியை சேர்ந்த வேலு மகன் சூர்யா 24. டிப்பர் லாரி டிரைவர். இவர் மேலச்செவலில் உள்ள தனியார் குவாரிக்கு லோடு ஏற்றச் சென்றிருந்தார். அங்கு லாரியை நிறுத்திவிட்டு அதன் பின்னால் நின்று கொண்டிருந்தார்.


அப்போது டிப்பர் லாரி திடீரென பின்னோக்கி நகர்ந்தது. இதை சூர்யா கவனிக்காததால் அவர் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement