பெண் பலாத்காரம் வாலிபர் கைது
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே திருவிழா பார்க்க கணவர் சென்றிருந்த நேரத்தில் வீடு புகுந்து இரண்டு குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரிமாவட்டம் ஈத்தாமொழி அருகேவசிக்கும் எலக்ட்ரீசியனுக்கு 32 வயதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவை காணச் சென்றார். மனைவி குழந்தைகளுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
கதவு உள் பக்கமாக தாழ்பாள் போடாமல் இருந்ததாக தெரிகிறது. இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி தனுஷ் 22, வீட்டுக்குள் புகுந்து எலக்ட்ரீஷியன் மனைவியை பலாத்காரம் செய்து தப்பினார் . ஈத்தாமொழி போலீசார் தனுஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.