அரசியல் செய்யும் நேரமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல் நாங்கள் செயலற்றவர்கள் இல்லை என இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பா.ஜ., கூறிஉள்ளது. இந்த சமயத்திலும் அரசியல் செய்ய வேண்டுமா? அரசுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவையில்லையா? அரசும் பா.ஜ.,வும் தெளிவுபடுத்த வேண்டும்.
பவன் கெரா, செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்
அழகி போட்டி தேவையா?
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் இந்த வேளையில் தெலுங்கானா அரசு நடத்தும் 'மிஸ் வேர்ல்டு' எனப்படும் அழகிப்போட்டியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஐ.பி.எல்., போட்டியே இந்தியா -- பாக்., மோதலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கவிதா, எம்.எல்.சி., - பாரத் ராஷ்ட்ரீய, சமிதி
பாடம் கற்பித்துள்ளோம்!
சண்டை நிறுத்தத்தால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமக்கு அமைதி அவசியம். இந்தியா எப்போதும் நீண்டகால போரை விரும்பியதில்லை. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினோம். அந்தப் பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டது.
சசி தரூர், லோக்சபா எம்.பி.,, காங்கிரஸ்
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'