டி.வி., நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது மனைவி புகார்: நால்வர் மீது வழக்கு

தேனி:தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆதவன், தன்னை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியதாக மனைவி சர்மிளா புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தேனி என்.ஆர்.டி., நகர் சர்மிளாவின் 41, கணவர் ஆதவன் 45, தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளர். இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வசித்து வந்தனர். ஆதவன் அதே நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரியும் கருணாவிளாசினியுடன் நெருங்கி பழகினார். அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

6 மாதங்களுக்கு முன் ஆதவன், அவரது பெற்றோர் கேசவமூர்த்தி, உமாபதி இணைந்து சர்மிளாவை தாக்கி, குழந்தையையும் வைத்துக்கொண்டனர். தனியாக வசித்து வந்த சர்மிளா தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் ஆதவன், கேசவமூர்த்தி, உமாபதி, கருணாவிளாசினி மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement