பத்மநாபசுவாமி கோவிலில் தங்கம் கொள்ளை

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் பிரகாரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதில் மீதமிருந்த தங்கம், கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

மீண்டும் தங்கத்தகடுகள் பதிக்கும் பணி நேற்று துவங்கியது. அப்போது கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்ட 96 கிராம் எடையிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்படி, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement