சுவாமி வீதியுலா வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

பெரும்பாக்கம்,:சுவாமி வீதியுலா வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து, அதில் அமர்ந்திருந்த சிறுவன் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நேற்று முன்தினம், எட்டாம் நாள் விழாவில், டிராக்டர் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

நள்ளிரவு, 1:45 மணிக்கு, சுவாமிக்கு மேல் அமைத்திருந்த இரும்புக் குடை, மின்கம்பியில் உரசி, அந்த வாகனம் முழுதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது, வாகனத்தில் அமர்ந்திருந்த கடலுார் மாவட்டம், இந்திரா நகர் பிரபாகரன் மகன் நிதிஷ்குமார், 14, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

மயங்கி விழுந்த, பெரும்பாக்கம், அய்யனார் மகன் கிருஷ்ணராஜ், 14, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிதிஷ்குமார், கோடை விடுமுறைக்காக, தாய்மாமா அய்யனார் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

Advertisement