தடகளப்போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி தடகள சங்கம் சார்பில், 38வது தடகளப்போட்டி தவளக்குப்பம் மைதானத்தில் இரண்டு நாள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், ரவி, சரவணன், லெனின் ராஜ், முன்னாள் டி.டி.ஸ்போர்ட்ஸ் சீனிவாசன் வெங்கடேஸ்வரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழாவில், டி.டி., ஸ்போர்ட்ஸ் வைத்தியநாதன், வேலாயுதம், முன்னாள் தடகள வீரர் வேல்முருகன், சீனியர் தடகளப் பயிற்சியாளர் தமிழப்பன், தடகள சங்கத்தின் செயலாளர் கோவிந்தசாமி, தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சங்க பொருளாளர் ரகுராமன், சோமசுந்தரம், கோபு, சந்திர மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement