பாரதிதாசன் பிறந்தநாள் விழா
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சங்கை தமிழ் சங்கம், திலகம் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் இணைந்து, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் பொதுத்தமிழ் நுால் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
சங்கை தமிழ்ச்சங்க தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். திலகம் ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய நிறுவனர் சுதாகரன், பொன்முடி, கல்லை தமிழ்ச்சங்க செயலாளர் மதிவாணன், ஆசிரியர் லட்சுமிபதி முன்னிலை வகித்தனர்.
விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், பாரதிதாசன் பாடல் - சண்முகம் பிச்சப்பிள்ளை; பாரதிதாசனும் தமிழும் - சிவக்குமார்; பாரதிதாசனும் பெண்ணுரிமையும் - துர்கா, பாரதிதாசனும் தமிழர் முன்னேற்றமும் - அபுதாகீர், ஆகியோர் குறிப்பிட்ட தலைப்புகளில் பேசினர்.
இதில் கமலநாதன், ஆண்டப்பன், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் செல்வமணி, நல்லாசிரியர் தெய்வநாயகம், டாக்டர் நெடுஞ்செழியன், கார்குழலி அறக்கட்ளை தாமோதரன், குசேலன், மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சங்கை தமிழ்ச்சங்க செயலாளர் சாதிக் நன்றி கூறினார்.
மேலும்
-
காவிரி நீர் கை கொடுக்காத நிலையில் வைகையும் இழுபறியால் மக்கள் தவிப்பு
-
மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி
-
டயாலிசிஸ் பிரிவில் 'ஏசி' இயந்திரம் பழுது
-
தமிழக சிறைகளில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்த விவகாரம்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலி; காஷ்மீரில் திரும்பியது இயல்பு நிலை!
-
பரமக்குடியில் கள்ளழகர் இன்று இரவு ஆற்றில் இறங்குகிறார்; நாளை குதிரை வாகனத்தில் எதிர் சேவை