ஆரோக்கிய தாய்மைக்கு ஹோமியோபதி

குழந்தையின்மைக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியான காரணங்களும் உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் சினை கட்டிகள்(பி.சி.ஓ.டி.,) மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்னை, சிறிய கருமுட்டைகள், கருமுட்டை வளர்ச்சியின்மை, முட்டை வெளிப்படாமல் இருப்பது, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, முதல் கர்ப்பத்தை தவிர்க்க எடுக்கப்படும் மருந்துகள், கருப்பை குழாய் புண், தைராய்டு பிரச்னை, கருப்பைக்குழாய் அடைப்பு, முதிர்ந்த வயது, மன அழுத்தம் போன்ற காரணங்கள் உள்ளன.

பெண்கள் தங்களது உடல், மனநலனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சி செய்வதும் மாதவிடாயை சீராக்கும்.

பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவுகள், கீரை, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹோமியோபதியில் அறுவை சிகிச்சையின்றி மாதவிடாய் பிரச்னைகளுக்கு எளிய பக்க விளைவு இல்லாத மருந்துகளை பயன்படுத்தி ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குழந்தைப்பேறு அடையலாம்.

-டாக்டர் சி.சுந்தரி ஹோமியோபதி நிபுணர், மதுரை

94435 29494

Advertisement