ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர்கள் தொல்லை
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர்கள் ஆதிக்கத்தால் தட்கல் டிக்கெட் வாங்க முடியாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சென்னைக்கு தினமும் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களும், வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ்சும் இயங்கி வருகிறது. செங்கோட்டை- சென்னை வழித்தடத்தில் முன்பு 4 மாதத்திற்கு முன்பு டிக்கெட் பதிவு செய்தால் கூட வெயிட்டிங் லிஸ்ட் நிலை இருந்தது.
தற்போது இந்த நடைமுறை 2 மாதத்திற்கு ஒருமுறை என மாற்றப்பட்டு, கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் சென்னைக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த வழித்தடத்தில் கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தெற்கு ரயில்வே நிர்வாகம் காதை பொத்திக் கொண்டுள்ளது.
இதனால் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் உயிரை பணயம் வைத்து பயணித்து வருகின்றனர். பொருளாதார வசதி உள்ளவர்கள் ஏ.சி. பெட்டிகளிலும், பிரிமியம் தக்கல் டிக்கெட்டுகளிலும் பயணிக்கின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினர் தக்கல் முன்பதிவில் டிக்கெட் எடுத்து பயணிக்க விரும்புகின்றனர். இதற்காக ஒரு நாள் முன்பே ரயில்வே ஸ்டேஷன் வந்து இரவு தங்கி தட்கல் முன்பதிவு டிக்கெட் பெற தவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலோனருக்கு தக்கல் டிக்கெட் கூட கிடைப்பதில்லை.
இரவு தங்க விரும்பாதவர்கள் புரோக்கர்கள் மூலம் டிக்கெட் பெறுகின்றனர். இவர்களின் ஆதிக்கத்தால் அப்பாவி பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, தட்கல் டிக்கெட் பெறுவதில் புரோக்கர்கள் நடமாட்டத்தை முழுவதும் ஒழிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு