அபிராமி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 29ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடந்தது. தினமும் பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்தனர். விழாவின் 10ம் நாள் பத்மகிரீஸ்வரருக்கும், அபிராமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து 60 அடி உயரம் கொண்ட தேரில் சுவாமி ,அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடத்தது. கலெக்டர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement