கோழி லாரிகள் மோதல்: டிரைவர் பலி
நரிக்குடி : நரிக்குடி அருகே கோழி ஏற்றிச் சென்ற இரு லாரிகள் மோதி கொண்டதில் டிரைவர் மணிகண்டன் பலியானார். இருவர் காயம் அடைந்தனர்.
சிவகாசியிலிருந்து லாரியில் பிராய்லர் கோழிகளை ஏற்றி, தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ராமநாதபுரம் நோக்கி ஒட்டி சென்றார். ராஜபாளையம் காளிதாசன் கிளீனராக உடன் சென்றார். நேற்று காலை நரிக்குடி மாயலேரி அருகே நிறுத்தி ஓரமாக நின்றிருந்தனர்.
அப்போது நரிக்குடியில் இருந்து கோழிகளை ஏற்றி இராமநாதபுரம் சென்ற சடையன்வலசையைச் சேர்ந்த பிரபு ஓட்டி வந்த லாரி, நின்றிருந்த லாரியில் மோதியது. இதில் வெளியில் நின்றிருந்த டிரைவர் மணிகண்டன் பலத்த காயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காளிதாசன் லேசான காயத்துடன் தப்பித்தார். மற்றொரு லாரி டிரைவர் பிரபு பலத்த காயமடைந்தார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.