7 மாவட்டங்களில் நாளை கனமழை

சென்னை : 'தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் அதிகபட்சமாக, 5 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார், வெங்கூர் மற்றும் நாகப்பட்டினத்தில், தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் வரும், 14, 15ம் தேதிகளில், கனமழை பெய்யலாம்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும், அதிகபட் ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆகமம் அல்லாத கோவில் : 3 மாதத்தில் அடையாளம் காண சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
எம்.ஜி., வின்சர் 'இ.வி., புரோ' 'எக்ஸ்ட்ரா' ரேஞ்ச், 'ஸ்மார்ட்' பாதுகாப்பு
-
கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
'அப்டேட்டட்' ஹீரோ 'ஹெச்.எப்., - 100'
-
எம்.ஜி., எம்9 இ.வி., முன்பதிவு துவக்கம்
-
'பிளையிங் ப்ளீ சி6' இ.வி., சத்தம் வராத என்பீல்டு பைக்