ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியிடமாற்றம்

சென்னை : தமிழக தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குநராக, குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக பணியாற்றிய குமார் ஜெயந்த், தமிழக தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பதவியில் இருந்த சாய்குமார், ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.

Advertisement