குரு பெயர்ச்சி விழா பக்தர்கள் வழிபாடு

திருப்பூர்; திருப்பூர் பகுதி கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
இயற்கை சுபர் எனப்படும் குருபகவான், நவகிரகங்களில் சுப பலன்களை அருள்பவராக உள்ளார். ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் பயணித்து, பலன்களை அளிக்கிறார். குருவின் 5, 7, 9 ம் பார்வை பெறும் ராசிகள் அதிக பயன்பெறுகின்றன.
கடந்த ஒரு ஆண்டாக ரிஷப ராசியில் இருந்த குருபகவான், நேற்று மிதுன ராசிக்கு பெயர்ச்சியானார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீவிக்னேஷ்வர பூஜை, புண்யாகம், குருபெயர்ச்சி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், சிறப்பு பரிகார அர்ச்சனைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள், யாகம் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்றனர்.
பூச்சக்காடு விநாயகர் கோவில், என்.ஆர்.கே., புரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், டி.ஏ.பி., ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் உள்பட சிவாலயங்களில் குருப்பெயர்ச்சி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும்
-
சட்டசபை தேர்தலுக்கு சர்வே பணியில் தி.மு.க.,
-
தடுப்புகள் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
-
செவிலிமேடு பாலாற்று பாலத்தில் மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
-
காபி இடைவேளைக்கு செல்லும் நீதிபதிகள்; ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
கள்ளக்காதலி வெட்டி கொலை போலீசில் பைனான்சியர் சரண்
-
இன்ஜினியர் வீட்டில் ரூ.12 லட்சம், 9 பவுன் நகை கொள்ளை