மெரிட் மெட்ரிக் பள்ளியில் கனவு மெய்ப்படும் கல்வி

திருப்பூர்; கொடுவாய் மெரிட் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:

எங்கள் பள்ளி, 25வது ஆண்டின் பிளஸ் 2 தேர்வு முடிவில், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது. மாணவியர் அனிதா, நந்தினி, பிரதிக்ஷா ஆகியோர் 600க்கு, முறையே 586, 581 மற்றும் 577 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தனர்.

கணித பாடத்தில் ஒரு மாணவி, கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 2 மாணவர்கள், 100 மதிப்பெண் பெற்றனர். தமிழ், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்தில் தலா ஒருவர், 100 மதிப்பெண் பெற்றனர். பொறியியல் படிப்பிற்கான 'கட் ஆப்' மதிப்பெண், 190க்கு மேல், 3 பேர், 180 மதிப்பெண்ணுக்கு மேல், 8 பேர்; 170 மதிப்பெண்ணுக்கு மேல், 11 மாணவர்கள் என மதிப்பெண் பெற்றனர். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

கராத்தே, சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங், அறிவியல் படைப்பு, வில் வித்தை, நடனம் மற்றும் இசை போன்றவையும், மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. 'நீட்' தேர்வுக்கு, மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். தற்போது எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ, மாணவியரின் கனவு மெய்ப்படும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement