'துாணிலும் இருப்பான்... துரும்பிலும் இருப்பான்'

திருப்பூர்,; ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி லட்சுமி நரசிம்மர் எழுந்தருளும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.திருப்பூர் பார்க் ரோடு மற்றும் திருமுருகன்பூண்டியில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில்,லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
முன்னதாக கணபதி ேஹாமம், புருஷ ஸூக்தம் ஆகிய யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அபிேஷகம், பூர்ணாகுதி, கலசாபிேஷகம் நடத்தி சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
l பல்லடம் ரோட்டில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள தனி சன்னதியில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், வெள்ளி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நரசிம்மர் அவதார மகிமை
மற்ற அவதாரத்தில் எல்லாம் நேரம் பார்த்து வந்து பக்தர்களை காப்பாற்றிய பெருமாள், நரசிம்ம அவதாரத்தில் மட்டும் அடுத்த நொடியே வந்து பக்தனை காப்பாற்றுவார். நான்தான் கடவுள் என்ற இறுமாப்புடன் இருந்தவன் ஹிரண்யன்; அவனது மகனாக பிரகலாதனோ மகாவிஷ்ணு வின் பக்தன். சாதாரண மனிதன் கடவுளாக முடியாது என்று தன் தந்தையிடமே வாதம் செய்தான் பிரகலாதன். மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொல்ல முயற்சித்து தோல்வியுற்றான் ஹிரண்யன். கடவுள் இருக்கிறார் என்றால் அவரை எனக்கு காட்டு என்று கூறினான் ஹிரண்யன். 'இறைவன் துாணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்' என்றான் பிரகலாதன். 'அப்படியென்றால் இந்த துாணில் இருக்கிறாரா?' என்று அங்கிருக்கும் துாணை உடைக்க அதிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். ஹிரண்யனை கொன்றார். ஆக்ரோஷமாக இருந்த நரசிம்மரை சிவபெருமான் சரபேஸ்வரர் அவதாரம் எடுத்து சாந்தப்படுத்த லட்சுமி தேவியை மடியிலே அமர்த்தி லட்சுமி நரசிம்மராக காட்சியளித்தார்.
மேலும்
-
இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல்லில் இன்று தொடக்கம்
-
இருதரப்பு மோதல்
-
குண்டும், குழியுமான நந்தியம்பாக்கம் சாலை சிரமத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
-
16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிநாடுனர் பங்கேற்று பயன்பெற அழைப்பு
-
நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு
-
சீராப்பள்ளி தினசரி சந்தைக்கு தனி இடம் ஒதுக்க கோரிக்கை