பட்டியலின மக்களுக்கு மேலும் 2 % இடஒதுக்கீடு

சித்திரை நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, மாநில அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. தொடர் போராட்டம் வாயிலாக, அதை சாத்தியமாக்கிய பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு நன்றி
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வன்னியர்களுக்கு உடனடியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்
தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்
பிற்படுத்தப்பட்ட மக்களின், சமூக, பொருளாதார நிலையை உறுதிப்படுத்த, தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில், இடஒதுக்கீடு முறையை கட்டாயமாக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
கல்வி, தனிநபர் வருமானத்தை அதிகரிக்க, வட மாவட்டங்களில் சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதை பொருட்களை ஒழிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை உட்பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்