நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலம்

கோவை : நரசிம்மர் ஜெயந்திவிழா, நேற்று வைணவக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆர்.எஸ்.புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நேற்று காலை 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார். சாற்றுமறை தீபாராதனை மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. நெய்விளக்கேற்றி திரளான பக்தர்கள், நரசிம்மரை வழிபட்டனர்.

ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவில் உட்பட அனைத்து வைணவ கோவில்களிலும், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement