திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

ஷிகாட்ஷே: திபெத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இன்று அதிகாலை 5.11 மணியளவில் திபெத்தின் ஷிகாட்ஷே நகரில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கின.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், மீட்பு படைகளை அனுப்பி வைத்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் திங்ரி கவுண்டி மாகாணத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளை அகற்ற கோரிக்கை
-
காமாட்சி அம்மன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை டிஜிட்டல் லாக்கர் வசதி தொடக்கம்
-
பழவேரியில் குடியிருப்புகளில் குரங்குகள் அட்டகாசம்
-
செவ்வாய்க்கிழமை தோறும் மின்தடை கூரம் சுகாதார நிலைய கர்ப்பிணியர் அவதி
-
பழையசீவரத்தில் மூடியே கிடக்கும் இ - சேவை மையம்
-
திருமங்கலத்தில் ரூ.44 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம்
Advertisement
Advertisement