பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள்; பெயர், போட்டோ வெளியிட்டு இந்தியா அம்பலம்!

புதுடில்லி: பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்கள் மற்றும் போட்டோவை இந்தியா வெளியிட்டது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது, பாக்.,கின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலை வில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத் திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.
அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் பலத்த பாதுகாப்புடன் நடந்தன. அதில், பாக்., ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்கள் மற்றும் போட்டோவை இந்திய ஆயுதப் படைகள் வெளியிட்டது.
* லெப்டினன்ட் ஜெனரல்- பயாஸ் ஹுசைன் ஷா, லாகூர் IV கார்ப்ஸின் தளபதி.
* லாகூர் 11வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ்
* பிரிகே முகமது புர்கான் ஷபீர்
* டாக்டர் உஸ்மான் அன்வர், பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்
* மாலிக் சொஹைப் அகமது பெர்த், பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினர்.
பாகிஸ்தான் நீண்ட காலமாக எந்த வகையான பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை என கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதால், பயங்கரவாதிகளுடன் பாக்., ராணுவத்துக்குள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது.
வாசகர் கருத்து (30)
sasikumaren - Chennai,இந்தியா
13 மே,2025 - 13:29 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
12 மே,2025 - 17:25 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
12 மே,2025 - 15:17 Report Abuse

0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
12 மே,2025 - 15:02 Report Abuse

0
0
Reply
RAJ - dammam,இந்தியா
12 மே,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
12 மே,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
12 மே,2025 - 12:18 Report Abuse
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
12 மே,2025 - 12:17 Report Abuse

0
0
Reply
vels - coimbatore,இந்தியா
12 மே,2025 - 12:08 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
12 மே,2025 - 11:54 Report Abuse

0
0
Reply
மேலும் 20 கருத்துக்கள்...
மேலும்
-
ரூ.3 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
-
எச்.சி.எல்., - பாக்ஸ்கான் சிப் ஆலை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
ப.வேலுார் டவுன் பஞ்., கூட்டம் 28 தீர்மானம் நிறைவேற்றம்
-
பிரதமர் கவுரவ நிதி திட்ட முகாம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
-
சூறாவளி காற்றுடன் கன மழை
-
மக்களின் கோரிக்கையை ஏற்று தடாகோவிலில் மேம்பாலம் அமைக்க பூமி பூஜை
Advertisement
Advertisement