நடிகர் சூரி கலந்துரையாடல் 

கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலில் நடிகர் சூரி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

நடிகர் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படத்தின் புரமோஷனுக்காக கடலுார் வி ஸ்கொயர் மாலுக்கு சூரி வருகை தந்தார். அங்குள்ள பி.வி.ஆர்., திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து டிரெய்லரை பார்த்து கலந்துரையாடினார். முன்னதாக அவரை மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், பாடலி சங்கர் செட்டியார், மால் இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisement