டூவீலரில் அரிவாள்களுடன் சென்ற 2 பேர் கைது

கரூர் :கரூரில், டூவீலரில் இரண்டு அரிவாள்களுடன் வந்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஈரோடு சாலை, முனியப்பன் கோவில் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த மணிகண்டன், 23, மதுரையை சேர்ந்த அழகர் முத்து, 19, ஆகிய இரண்டு பேரும் டூவீலரில் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, யமஹா டூவீலரை சோதனை செய்தனர்.


அதில், இரண்டு அரிவாள்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார், மணிகண்டன், அழகர் முத்து ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, மணிகண்டனின் மனைவி கவுதமி என்பவர், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துாரை சேர்ந்த ஜீவா என்பவருடன், அடிக்கடி மொபைல் போனில் பேசுவது தெரிய வந்தது. இதனால், ஜீவாவை தாக்கும் வகையில், அரிவாள்களை மணிகண்டனும், அழகர் முத்துவும் கொண்டு சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement