கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது

தேனி : கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்., நகர் முருகேசன் 30. இவர், பன்றிகளை வளர்த்து வருவதுடன் திருவிழாக்களில் பீங்கான் ஜாடிகளை விற்பனை செய்கிறார்.

அவருக்கு பழக்கமான கோவை மாற்றுத் திறனாளியான அப்துல்ரகுமானிடம் 43, முன்பணமாக ரூ.30 ஆயிரம் வழங்கி, கரும்பு அரவை இயந்திரத்தை பெற்றார்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா முடிந்ததும், மீதிப்பணம் தருவதாகக் கூறினார். பின், வீரபாண்டி பகுதியில் கடை அமைத்தார். இரண்டு நாட்களில் கரும்பு அரவை இயந்திரம் பழுதானது.

பழுதான இயந்திரத்தை அப்துல்ரகுமானிடம் முருகேசன் முத்துத்தேவன்பட்டி பிரிவு அருகே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் வைத்து, திரும்ப ஒப்படைத்தார். முன்பணம் ரூ.30 ஆயிரத்தை முருகேசனிடம் அப்துல்ரகுமான் வழங்கினார்.

பணத்தை எண்ணிய போது 7 கள்ள நோட்டுகள் இருந்தன. முருகேசன் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். அப்துல்ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

Advertisement