காட்டெருமை தாக்கி கண்டக்டர் படுகாயம்

ஏற்காடு: ஏற்காடு, நாகலுார் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 45. தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார்.


நேற்று காலை, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்து அருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற காட்டெருமை, தேவேந்திரனை கொம்பால் குத்தி துாக்கி வீசியது. அக்கம் பக்கத்தினர் கூச்ச-லிட்டு, எருமையை விரட்டினர். பின் படுகாயம் அடைந்த தேவேந்திரனை, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement