அப்பா பைத்தியம் சுவாமி 166வது குரு பூஜை விழா

சேலம்,: சேலம், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், 166வது குரு பூஜை விழா, அபி ேஷக ஆராதனை அன்னமளிப்பு விழா நேற்று நடந்தது. காலையில் ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு பால், இளநீர், சந்தனம் உள்-ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்-தது.



தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின் பூஜை செய்து மதியம், 12:00 மணிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குரு பூஜையில் புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்-டது.

Advertisement