எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி 'சதம்'

தலைவாசல்: தலைவாசல் அருகே பெரியேரி, ஆட்டுப்பண்ணை பகுதியில், எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பிளஸ் 2 படித்த மாணவர்கள் அனைவரும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனால், 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவி ராகவி, 600க்கு, 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.


இவர், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றார். மாணவி ஜனனி, 593 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடம் பிடித்தார். இவர், கணிதத்தில், 100 மதிப்பெண் பெற்றார். ரஞ்சிதா, 590 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பெற்றார். இவர், வேதியியலில், 100 மதிப்பெண் பெற்றார். இயற்பியலில் ஒருவர், வேதியியலில், 5 பேர், கணினி அறிவியலில், 10 பேர், கணிதத்தில், 6 பேர், கணினி பயன்-பாட்டில் ஒருவர், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல், 104 மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளி தலைவர் சக்திவேல், செயலர் சோலைமுத்து, பொருளாளர் ராமலிங்கம், கல்விக்குழு உறுப்பி-னர்கள், தலைமை ஆசிரியர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

Advertisement