தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பெரப்பேரியில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அமராவதி, சுப்ரமணி, காளி, திருஞானசம்பந்தம், அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மஸ்தான், பேச்சாளர் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
கிளைச் செயலாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement