இ.பி.எஸ்., பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.,வினர் ரத்த தானம்
சேலம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு ஓமலுார் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில், ஐ.டி., விங் சேலம் மண்டல பொருளாளர் பானுபிரதாப் தலை-மையில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தொடங்கிவைத்தார்.ஐ.டி., விங் நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பேரவையினர், கட்சியினர் என, 200க்கும் மேற்பட்டோர், ரத்த தானம் செய்தனர். மாநில ஜெ., பேரவை துணை செயலர் விக்னேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார் பங்கேற்றனர். மேலும் ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ், ஜூஸ், சிக்கன் பிரியாணி வழங்கப்-பட்டது.
அதேபோல் மேட்டூர் ராஜ்யசபா எம்.பி., அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா தலைமையில் அ.தி.மு.க.,வினர் ரத்ததானம் செய்தனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை, அ.தி.மு.க, நிர்வாகிகள் என, 30 பேர் ரத்த தானம் செய்தனர். மாநில ஜெ., பேரவை துணை தலைவர் கலையரசன், வக்கீல் அணி மாவட்ட செயலர் சித்தன், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் சந்திரமோகன் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலர் நிர்மல் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.
சங்ககிரி எம்.எல்.ஏ.,
சங்ககிரியில், கிழக்கு ஒன்றியம், நகர அ.தி.மு.க., சார்பில் ரத்த தானம், இலவச கண்
சிகிச்சை முகாம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் வெங்கடா-ஜலம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் உள்பட, 50 பேர் ரத்த தானம் செய்தனர். சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலர் சிவகுமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் ரத்-தினம், சங்ககிரி நகர செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
இன்று சிறப்பு பூஜை
சேலம் மாநகர, மாவட்ட அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:00 மணிக்கு, டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
அமைப்பு செயலர் சிங்காரம், மாநகர பொறுப்பாளர்கள் செல்-வராஜ், பாலு, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.