மொபைல் மோகம்: மகளை கொன்று தந்தை தற்கொலை 

ஆண்டிமடம்:அரியலுார் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் ரவி, 49; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தாமரைச்செல்வி. தம்பதிக்கு இரு மகள்கள். இதில், இரண்டாவது மகள் சந்தியா, சமீபத்திய பிளஸ் 2 தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

ரவி தன் வயலில் கட்டி வரும் வீட்டு வேலைகளை தாமரைச்செல்வி, ரஞ்சனி கவனித்து வருகின்றனர். நேற்று முன்தினம், இவர்களுக்கு மதிய உணவை எடுத்துவரச் சென்ற ரவி, வெகுநேரமாகியும் வரவில்லை. மொபைல் போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தாமரைச்செல்வியும், ரஞ்சனியும் இரவு வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சந்தியா இறந்த நிலையிலும், அருகிலேயே ரவி துாக்கில் தொங்கியபடி சடலமாகவும் கிடந்தனர். ஆண்டிமடம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

சந்தியா எப்போதும் மொபைல் போனில் மூழ்கிக் கிடந்ததால், ரவி அவரை கண்டித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்னையில் மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement