இன்று இனிதாக ... (14.05.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம்

வைகாசி பிரம்மோத்சவம்

சேஷ வாகனம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், அதிகாலை 4:00 மணி;சந்திர பிரபை, மாலை 5:30 மணி.

சித்திரை பெருவிழா

நடராஜர் தரிசனம், கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 7:30 மணி;சந்திர பிரபை, மாலை 5:00 மணி.

அக்னி வசந்த மஹாபாரத விழா

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: மச்சநாட்டின் பெருமையும், கீசகன் வதமும், சொற்பொழிவாளர்: கோவிந்தராஜி, கவி வாசித்தல்: முனுசாமி, திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி. நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம், தலைப்பு: விராட பருவம், காலை 10:00 மணி.

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: கண்ணன் துாதும், மன்னன் வாதும், சொற்பொழிவாளர்: அருணாசல அடிகளார், கவிவாசித்தல்: கிராமிய பாடகர் கபாலீஸ்வரன், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி; ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளையார்குப்பம் ஆயாராம்மன் நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: கண்ணன் துாது, இரவு 10:00 மணி.

 மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: இடும்பியின் முக்கால ஞானகுறியும், பகாசூரன் சாதம் எடுத்தல்,சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம், மதியம் 2:00 மணி.

குரு வார சிறப்பு அபிஷேகம்

 சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

 குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு

 கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

 விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

 கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

 விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

பொது

அன்னதானம்

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

Advertisement