பிளஸ் 2 பொதுத்தேர்வில் ராகவேந்திரா பள்ளி 'சதம்'

மேச்சேரி: மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவ, மாணவியர், தொடர்ந்து, ௧3 ஆண்டாக, ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அண்மையில் வெளியான தேர்வு முடிவில், பள்ளியில், 600க்கு, 585, 571, 567 மதிப்பெண்கள் முறையே மாணவர்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பெற்றனர்.



மேலும் தேர்வு எழுதிய, 55 மாணவர்களில், 20 பேர், 500க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பாடவாரியாக அதிகபட்சமாக, தமிழில், 99, ஆங்கிலம், 98, கணிதம், 99, இயற்பியல், 96, வேதியியல், 98, உயிரியல், 99, கணினி அறிவியல், ௧00 மதிப்-பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாண-வியர், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோரை, பள்ளி தாளாளர் ராகவேந்திரா மணிவண்ணன், நிர்வாக இயக்குனர் கவு-சல்யா, இணை இயக்குனர் சுகன்ராஜ் பாராட்டினர். முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Advertisement