மது போதையில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்

கரூர்: கரூர் அருகே, மது போதையில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தனஞ்சேனா, 43, பசந்தாஸ், 44, நிரஞ்சன், 40. இவர்கள் மூன்று பேரும், கரூர் அருகே கருப்-பம்பாளையம் பகுதியில் தங்கி, டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 9ல் இரவு மூன்று பேரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது,
தனஞ்சேனாவுக்கும், பசந்தாஸூக்கும் தகராறு
ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தனஞ்சேனா, கத்தியால் பசந்தாஸ் வயிற்றில் குத்தியுள்ளார்.
அதில், காயமடைந்த பசந்தாஸ் கரூரில் உள்ள, தனியார் மருத்து-வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, நிரஞ்சன் கொடுத்த புகார்படி, தனஞ்சேனா மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement