கொடிசியா சார்பில் இன்று துவங்குகிறது 'சப்கான் 2025'
கோவை,; கொடிசியா சார்பில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் தொழில் வாய்ப்பை அதிகரிக்கும், 'சப்கான் 2025' கண்காட்சி, இன்று துவங்குகிறது.
தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் சப்கான் கண்காட்சியை, கொடிசியா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகிறது.
இக்கண்காட்சியில், ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் பெரு நிறுவனங்களும், தங்களுக்குத் தேவையான உபகரணங்களை, உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கும்.
இப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட,எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், அந்த நிறுவனங்களை அணுகி, உற்பத்தி ஆர்டர் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, பெருநிறுவனங்களுக்கும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கும் இடையே வர்த்தக வாய்ப்பை உருவாக்கும் தளமாக, சப்கான் கண்காட்சி நடக்கிறது.
9வது கண்காட்சி இன்று துவங்கி, 4 நாட்களுக்கு நடக்கிறது. 18 பொதுத்துறை நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
225க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமையும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுப் பயனடைய, எம்.எஸ்.எம்.இ, நிறுவனங்களுக்கு, கொடிசியா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்
-
பயணிகள் தள்ளிய அரசு பஸ் ஓட்டை உடைசலுக்கு தீர்வு எப்போது
-
கோட்டையூரில் சித்திரை தேரோட்டம்
-
மருத்துவக்கல்லுாரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?
-
குமரி - ஹவுரா, தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களை தினமும் இயக்க வலியுறுத்தல்
-
பைக் எதிரே வந்ததால் கண்மாய்க்குள் பாய்ந்த பஸ்
-
ஆந்திரா எம்.எல்.ஏ.,க்கள் அறுபடை வீடு பயணம்