மாணவர்களுக்கு பயனளிக்கும் வழிகாட்டி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை

கோவை, ; பிளஸ் 2க்கு பின், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வி தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் ,கல்லூரி கனவு 2025 மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்குகிறது.

வரும் 16ம் தேதி என்.ஜி.எம்., கல்லூரி, 19ம் தேதி ஆர்.வி.கல்லூரி, 21ம் தேதி கற்பகம் கல்வி நிறுவனம் மற்றும் 23ம் தேதி, உக்கடம் பெரியகுளம் மாநகராட்சி பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி தொடர்பாக, கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிளஸ் 2 முடித்த பிறகு, எந்த துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், இந்த வழிகாட்டி நிகழ்ச்சி பயனளிக்கும்.

கல்வியைதொடர முடியாத சூழ்நிலைகளில், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பற்றிய விரிவான விளக்கங்களும், மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வியாளர்கள் நேரில் பங்கேற்று, இந்த தகவல்களை மாணவர்களிடம் பகிர்வார்கள். நிகழ்ச்சிக்கான அறிவிப்புகள் பள்ளிகள் வழியாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement