விபத்தில் காய்கறி வியாபாரி பலி

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், ௭௦; காய்கறி வியாபாரி. இவர், குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக,

நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., ஹெவி டூட்டி' மொபட்டில் காய்கறிகளை கட்டி எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். குமாரபாளையம் நுழைவு பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சென்ற போது நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்த மாணிக்கத்தை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

Advertisement