ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க., பூஜை

கண்டமங்கலம்: ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், தீவிரவாதத்தை ஒழித்து வெற்றி பெற வேண்டி, கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பள்ளித்தென்னல் அரசமரத்து விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது.

வானுார் தொகுதி சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளித்தென்னல் ஊராட்சி தலைவர் பத்மநாபன், ஒன்றிய இணை செயலாளர் சவிதா வெங்கடாஜலபதி வரவேற்றனர். மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலக்கிருஷ்ணன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement