வித்யா விகாஸ் பள்ளி சாதனை

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஐஸ்வர்யா, 591 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.


இதேபோல் மாணவி மதிளா, 587 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ராகவி, 585 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவியரை, வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண்மை அறங்காவலர்கள் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சீராளன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டினர்.

Advertisement