மதுரையில் முருக பக்தர் மாநாடு; ஹிந்து முன்னணி ஆலோசனை
பல்லடம்; பல்லடம் நகர ஒன்றிய ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சித், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூன் 22, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஹிந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. புதிய கமிட்டிகள் அமைப்பது மற்றும் காவடி குழுக்கள், முருக பக்தர்கள் அனைவரையும் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பல்லடத்தில் இருந்து, 100 வாகனங்களில் சென்று மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement