ஜல்லிக்கட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் மணிகண்டவாசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆவியூரில் வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காரியாபட்டி தாசில்தாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தார். அதை ரத்து செய்து அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்ட தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது. சட்டப்படி கால்நடைத்துறை செயலருக்கு ஆன்லைன் மூலம் புதிதாக மனு அளிக்கலாம் என தெரிவித்தது.

நீதிபதிகள்: மனுதாரர் கால்நடைத்துறை செயலருக்கு மனு அளிக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Advertisement