லாரி மீது சுற்றுலா வேன் மோதி 10 பேர் படுகாயம்

வடமதுரை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கொடிங்கியம் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு சுற்றுலா வேனில் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு திருச்சி - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் வந்தபோது ரோட்டோரம் டீசல் தீர்ந்ததால் நின்றிருந்த சிமென்ட் லோடு லாரி மீது வேன் மோதியது.

வேன் டிரைவர் பஜ்லு ரஹ்மான் 30, வேனில் பயணித்த வள்ளியம்மாள்70, செந்தில் நாயகி 53, சித்திரக்கலா 45, சந்திரா 42, சரஸ்வதி 65, கற்பகம் 59 உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement