சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.40 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்திய பெண்கள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி, கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, 34 கிலோ உயர் ரக கஞ்சா, சாக்லேட்டுகளில் கலந்த 15 கிலோ மெத்தம்பெட்டமைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.40 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, திருச்சூரைச் சேர்ந்த சிமி, 39, சென்னையைச் சேர்ந்த ராபியாட், 40, மற்றும் கோவையை சேர்ந்த கவிதா, 40, ஆகிய பெண்கள் 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தாய்லாந்தில் இருந்து ஏர் ஏசியாவின் ஏகே-33 விமானத்தில் கஞ்சா கடத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருக்காக போதைப் பொருட்களை கடத்தி வந்தனர். இவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.




மேலும்
-
துருக்கி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது ஜேஎன்யு
-
சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்