மக்களின் கோரிக்கையை ஏற்று தடாகோவிலில் மேம்பாலம் அமைக்க பூமி பூஜை
அரவக்குறிச்சி :கரூர் -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படும், தடாகோவில் பிரிவு சாலையில், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது. எம்.பி., ஜோதிமணி தலைமை வகித்தார்.
கரூர் - - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நங்காஞ்சி ஆற்றின் அருகில் உள்ள பாலம் வழியாகத்தான், அரவக்குறிச்சிக்குள் நுழைய வேண்டும். இவ்வழியாக நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதிக போக்குவரத்து உள்ள என்எச் 7 சாலையை கடந்துதான், அரவக்குறிச்சிக்குள் செல்ல வேண்டும். அரவக்குறிச்சிக்கு கிழக்கு பகுதி கிராமங்களான தடாகோவில், கணக்குவேலன்பட்டி, ராசாபட்டி, வெஞ்சமாங்கூடலுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, தினமும் அரவக்குறிச்சிக்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
அப்போது, நெடுஞ்சாலையில் வரும் அதிவேக வாகனங்கள் மோதி விபத்துகள் நடந்து வருகின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்பு, விபத்தில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க, சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் எம்.பி., ஜோதிமணியின் நாடாளுமன்ற தொகுதி நிதியிலிருந்து, ரூ.22.3 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
பாலம் கட்டும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும் என எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார். நேற்றைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு