செவ்வாய்க்கிழமை தோறும் மின்தடை கூரம் சுகாதார நிலைய கர்ப்பிணியர் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் வாயிலாக, சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர் மற்றும் பொது மக்கள் மருத்துவம் பெற்று செல்கின்றனர்.
இந்த சுகாதார நிலையத்திற்கு, வெள்ளைகேட் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்த மின் வாரிய அலுவலகத்தில், மின் பராமரிப்பு பணிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மின் தடை செய்யப்படுகிறது. அதே தினத்தன்று பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் வாராந்திர பராமரிப்பு பணிக்கு மின் தடை செய்யப்படும் நாளை, வேறு ஒரு தினத்தில் மாற்ற செய்ய வேண்டும் என, கர்ப்பிணியர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கூரம் சுகாதார நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தினத்தன்று மின் தடை செய்ய வேண்டாம் என, மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியும். அதே தினத்தில் தான் மின் தடை செய்கின்றனர். இதை வேறு ஒரு தினத்திற்கு மாற்றம் செய்ய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மேலும்
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி