திருமங்கலத்தில் ரூ.44 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் திருமங்கலம் ஊராட்சி உள்ளது. சுங்குவார்சத்திரம் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தின் கூரை சேதமடைந்து, சுவர்கள் விரிசல் ஏற்பட்டது.

மேலும், மழை நேரங்களில், மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே தேங்குவதால், ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, பழைய கட்டடத்தை அகற்றி, புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 44 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

எட்டு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement