ஸ்னுாக்கர்: அத்வானி 2வது இடம்

மும்பை: 'பால்க்லைன்' ஸ்னுாக்கர் பைனலில் ஏமாற்றிய பங்கஜ் அத்வானி 2வது இடம் பிடித்தார்.
மும்பையில், அனைத்து இந்திய 'பால்க்லைன்' ஸ்னுாக்கர் தொடர் நடந்தது. இதன் பைனலில் பங்கஜ் அத்வானி, இஷ்பிரீத் சிங் சந்தா மோதினர். ஒரு கட்டத்தில் 4-3 என முன்னிலையில் இருந்த அத்வானி, முடிவில் 7-10 (45-62, 77-4, 35-59, 65-7, 12-68, 66-57, 60-19, 0-90, 70-33, 97-0, 16-99, 35-75, 27-75, 31-68, 10-83, 122-6, 72-73) என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார். இஷ்பிரீத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். அத்வானிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தார் இஷ்பிரீத். கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் 8-10 என அத்வானியிடம் வீழ்ந்த இஷ்பிரீத், கடந்த மார்ச் மாதம் நடந்த கிளாசிக் ஸ்னுாக்கர் தொடரில் 6-8 என தோல்வியடைந்திருந்தார்.

Advertisement