ஒட்டப்பட்டிக்கு பஸ் இயக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

கரூர் :ஒட்டப்பட்டி வழியாக பஸ் இயக்க வேண்டும் என, மக்கள் குறைதீர் கூட்டத்தில், கரூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:


கடவூர் ஊராட்சி ஒன்றியம், கொசூர் அருகில் ஒட்டப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் பஸ் வசதியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, கூலி வேலைகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
காலை, மாலை பஸ் வசதியில்லாமல் பல கி.மீ., துாரம் நடந்து சென்று, பின் பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. கொசூரில் இருந்து காலை, 7:30 மணிக்கு ஒட்டப்பட்டி வழியாக கரூருக்கு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் மாலை, 4.00 மணிக்கு கரூரிலிருந்து பஸ் இயக்க வேண்டும். அப்போது தான் மாணவ, மாணவியர், பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement