சாலைபுதுாரில் ரூ.38.83 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
கரூர் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 38.83 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
நொய்யல் அருகில் உள்ள சாலைப்புதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. 8,845 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 32.19 ரூபாய், அதிகபட்சமாக, 49.25, சராசரியாக, 44.15 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 3,086 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து, 26 ஆயிரத்து, 517 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 183.69, அதிகபட்சமாக, 185.79, சராசரியாக, 185.69, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 130.69, அதிகபட்சமாக, 179.49, சராசரியாக, 160.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 4,225 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 6 லட்சத்து 88 ஆயிரத்து 751 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 100.59, அதிகபட்சமாக, 142.39, சராசரியாக, 132.69, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 95.09, அதிகபட்சமாக, 129.99, சராசரியாக, 121.99, வெள்ளை ரகம் ஒரு விலையாக கிலோ, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம் 26,294 கிலோ எடையுள்ள எள், 30 லட்சத்து, 68 ஆயிரத்து, 721 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 38 லட்சத்து, 83 ஆயிரத்து, 989 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
மேலும்
-
பொறுப்பேற்பு
-
கல்வராயன்மலையில் கோடை விழா நடத்தப்படுமா? கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தி
-
'மிஸ் கூவாகம்' கள்ளக்குறிச்சியில் நடத்த எதிர்பார்ப்பு
-
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
-
கண்ணகி கோயிலை தமிழக அரசு எடுக்க வேண்டும் -பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் வலியுறுத்தல்
-
கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ.,விடம் மனு