அடுக்கு மாடி குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு; மக்கள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூர் ஊராட்சியில் உள்ள பூனையானூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 192 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்பவர்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் மற்றும் வாணியாறு அணைப்பகுதியிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடும் வறட்சியின் காரணமாக கடந்த, 20 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல் தண்ணீரும் வரவில்லை. வாணியாறு அணை பகுதியில் இருந்து வரும் தண்ணீரும் வரவில்லை. குடிநீரின்றி தொடர்ந்து இக்குடியிருப்பில் இருந்து வரும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து குடியிருப்பு சங்க தலைவர் இடும்பன் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு ஒருமுறை தண்ணீர் வருவதே பெரும் சவாலாக உள்ளது. கடந்த, 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து பி.டி.ஓ., அலுவலகத்தில் மாவட்ட அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இக்குடியிருப்பில் இருக்கும் மக்கள் வெங்கடசாமித்திரம் சென்று சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. ஆகவே அடுக்குமாடி குடியிருப்பு முறையாக குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்
மேலும்
-
உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
-
விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி
-
தி.மு.க., பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி
-
மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை
-
கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
செயற்கைக்கோள் தயாரிப்பு; தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ கெடு